குறு உணவு உற்பத்தி நிலையங்களுக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

குறு உணவு உற்பத்தி நிலையங்களை ஏற்படுத்த ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
குறு உணவு உற்பத்தி நிலையங்களுக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

குறு உணவு உற்பத்தி நிலையங்களை ஏற்படுத்த ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

சுய சார்பு திட்டத்தின் மூன்றாம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டு வருகிறார். இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

குறு உணவு உற்பத்தி நிலையங்களுக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் வேளாண் பொருள்களின் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்கும்பொருட்டு, குறு உணவு உற்பத்தி நிலையங்களை ஏற்படுத்த 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 2 லட்சம் உணவு உற்பத்தி நிலையங்கள் ஏற்படுத்தப்படும். சுய உதவி குழுக்கள், கூட்டுறவு அமைப்புகள், ஏற்கெனவே  உள்ள குறு உற்பத்தி நிலையங்கள், வேளாண் உற்பத்தி மையங்களின் உதவியுடன் இது செயல்படுத்தப்படும். 

ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஏற்ப விளைபொருள்கள் முடிவு செய்யப்படும். மேம்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு தரத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com