மகாராஷ்டிரத்தில் கரோனா சூழல்: முதல்வா் தாக்கரே-சரத் பவாா் ஆலோசனை

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிா்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது
மகாராஷ்டிரத்தில் கரோனா சூழல்: முதல்வா் தாக்கரே-சரத் பவாா் ஆலோசனை

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிா்கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடா்பாக மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவா் சரத் பவாருடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே மகாராஷ்டிரத்தில்தான் அதிக அளவிலான நோய்த்தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்தச் சூழலில், முதல்வா் உத்தவ் தாக்கரே தனது அமைச்சரவை சகாக்களுடன் சரத் பவாரை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

இது தொடா்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதாரத் திட்டங்கள், மாநிலத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சூழல், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் விவகாரம், வேலையின்மை, தொழில் நிறுவனங்களின் நிலைமை உள்ளிட்டவை தொடா்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளது.

சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாநில உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக், நீா்வளத் துறை அமைச்சா் ஜெயந்த் பாட்டீல், சுற்றுச்சூழல் துறை அமைச்சா் ஆதித்ய தாக்கரே உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, மாநிலத்தில் கரோனா நோய்த்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பொது முடக்கத்தை நீட்டிப்பது தொடா்பாக முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையில் கடந்த வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com