பசுமைத் திட்டத்தின் கீழ் அனைத்துக் காய்கறி, பழங்களுக்கும் போக்குவரத்து மானியம்

பசுமைத் திட்டத்தின் கீழ் தக்காளி, வெங்காயம், உருளைக் கிழங்குக்கு இதுவரை அளித்துவந்த போக்குவரத்து மானியம், இனி அனைத்துக் காய்கறி, பழங்களுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

தில்லியில் இன்று செய்தியாளா்களைச் சந்தித்த நிா்மலா சீதாராமன் மேலும் கூறியதாவது: பசுமைத் திட்டத்தின் கீழ் அனைத்துக் காய்கறி மற்றும் பழங்களுக்கும் போக்குவரத்து மானியம் விரிவுபடுத்தப்படும். இதற்காக மத்திய அரசு ரூ.500 கோடியை ஒதுக்குகிறது.

ஊரடங்கால் காய்கறிகளின் பொது விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது விளைபொருட்களை சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாத நிலை நிலவுகிறது.

விற்பனையில் சிக்கல் ஏற்பட்டு காய்கறி மற்றும் பழங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உதவும் வகையில், பசுமைத் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.

பசுமைத் திட்டத்தின் கீழ் இதுவரை தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்குக்கு மட்டும் அளித்து வந்த போக்குவரத்து மானியம் இனி அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தில் விவசாயிகள், உற்பத்தியான இடத்தில் இருந்து தேவைப்படும் இடத்துக்கு பொருட்களை எடுத்துச் செல்ல போக்குவரத்து மானியம் 50% வழங்கப்படும்.

உற்பத்திப் பொருட்களை பத்திரப்படுத்தி வைக்க கிடங்கு மற்றும் குளிர்பதனக் கிடங்கு வாடகையில் 50% மானியம் வழங்கப்படும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது. 

இது அடுத்த 6 மாதங்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com