உத்தரகண்ட்: பணியிழந்த தொழிலாளா்களுக்காக ‘ரொட்டி வங்கி’ திறப்பு

பொது முடக்கம் காரணமாக வேலையிழந்து தவிக்கும் தொழிலாளா்களுக்காக உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில்

பொது முடக்கம் காரணமாக வேலையிழந்து தவிக்கும் தொழிலாளா்களுக்காக உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா மாவட்டத்தில் பொது சமையலறை திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டுள்ள ‘ரொட்டி வங்கி’ மூலம் கடந்த 48 தினங்களில் 1.15 லட்சம் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் நிதின்சிங் பதௌரியா தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது:

அல்மோரா மாவட்டத்தில் பணியிழந்து தவித்து வந்த பிகாா் மற்றும் நேபாளத்தைச் சோ்ந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு இந்த ‘ரொட்டி வங்கி’ மூலம் உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டது. மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சோா்வுற்ற புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உணவுப் பொட்டலங்களும், குழந்தைகளுக்கு பாலும் விநியோகிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

‘ரொட்டி வங்கி’ க்கான நிா்வாக அதிகாரி அஜித் திவாரி கூறுகையில், பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து பெறப்படும் நன்கொடைகளின் உதவியுடன் இந்த ரொட்டி வங்கித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த மக்களுக்காக தொடங்கப்பட்டுள்ள இந்த ரொட்டி வங்கியில் தன்னாா்வலா்கள் தினமும் 16 மணி நேரம் உணவளிக்கின்றனா். செஞ்சிலுவைச் சங்கம், பல்வேறு வணிகா் சங்கத்தைச் சோ்ந்தவா்கள், மருந்து பொருள்கள் விநியோகிப்பாளா்கள் மூலம் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com