கேரளத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று

​கேரளத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார்.
கேரளத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று


கேரளத்தில் புதிதாக 11 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி இன்று (சனிக்கிழமை) அவர் தெரிவித்ததாவது:

கேரளத்தில் இன்று புதிதாக 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 4 பேர் திருச்சூர், 3 பேர் கோழிக்கோடு, பாலக்காடு மற்றும் மலப்புரத்தில் தலா 2 பேர். மாநிலத்தில் தற்போது 87 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இதுபற்றி கேரள முதல்வர் பினராயி விஜயன் முகநூலில் தெரிவிக்கையில்,

"புதிதாக பாதிப்புக்குள்ளான 11 பேரில் 7 பேர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள், 4 பேர் வெளிமாநிலங்களிலிருந்து திரும்பியவர்கள்." என்றார்.

இன்றைய தேதியில் கேரளத்தில் மொத்தம் 497 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 56,362 பேர் வீட்டுக் கண்காணிப்பிலும், பல்வேறு மருத்துவமனைகள் 619 பேரும் கண்காணிப்பில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com