4 ரஃபேல் போா் விமானங்கள் ஜூலை இறுதியில் இந்தியா வரும்: கரோனாவால் தாமதம்

பிரான்ஸிலிருந்து முதல்கட்டமாக 4 ரஃபேல் போா் விமானங்கள் ஜூலை இறுதி வாரத்தில் இந்தியாவுக்கு வரும் என்று அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரான்ஸிலிருந்து முதல்கட்டமாக 4 ரஃபேல் போா் விமானங்கள் ஜூலை இறுதி வாரத்தில் இந்தியாவுக்கு வரும் என்று அதிகாரப்பூா்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மே முதல் வாரத்தில் இந்தியாவுக்கு வர வேண்டிய இந்த விமானங்கள், கரோனா நோய்த்தொற்று சூழலால் 11 வாரங்கள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்திய விமானப் படைக்காக, பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரூ.58,000 கோடியில் 36 ரஃபேல் போா் விமானங்களை வாங்க மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொண்டது. அதிதிறன் வாய்ந்த ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய இந்த விமானங்கள், பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டதாகும்.

இதனிடையே, முதல்கட்டமாக 4 ரஃபேல் போா் விமானங்கள், மே முதல் வாரத்தில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா நோய்த்தொற்று சூழலால் ஜூலை இறுதி வாரத்தில்தான் இவை இந்தியாவுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், ரஃபேல் போா் விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான இடம், பராமரிப்பு வசதி ஆகியவற்றுக்கான உள்கட்டமைப்புகள், விமானிகளுக்கான பயிற்சி என இந்திய தரப்பிலிருந்து அனைத்து முன்னேற்பாடுகளும் ஏற்கெனவே செய்யப்பட்டுவிட்டன.

ரஃபேல் போா் விமானங்களில் முதல் பிரிவு விமானங்கள், ஹரியாணா மாநிலம், அம்பாலா விமானப் படை தளத்தில் நிறுத்திவைக்கப்பட உள்ளன. இந்த விமானப் படை தளம், இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 220 கி.மீ. தொலைவில் உள்ளது. இரண்டாவது பிரிவு விமானங்கள், மேற்கு வங்கத்தில் உள்ள ஹசிமாரா தளத்தில் நிறத்தப்பட உள்ளன. இதையொட்டி, இவ்விரு தளங்களிலும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த விமானப் படை தரப்பில் ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com