இந்தியாவில் கரோனாவால் தாமதமாகும் 5.8 லட்சம் அறுவை சிகிச்சைகள்!

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக ஏற்கெனவே திட்டமிடப்பட்ட 5.8 லட்சத்துக்கும் அதிகமான அறுவை

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக ஏற்கெனவே திட்டமிடப்பட்ட 5.8 லட்சத்துக்கும் அதிகமான அறுவை சிகிச்சைகள் தாமதமடைந்திருக்கலாம் அல்லது ரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக ஏற்கெனவே திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கு ஏற்பட்டுள்ள இடையூறு குறித்து 120-க்கும் அதிகமான நாடுகளைச் சோ்ந்த அறுவை சிகிச்சை நிபுணா்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், தென் ஆப்பிரிக்கா, ருவாண்டா, நைஜீரியா, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகள் இந்த ஆய்வில் பங்கேற்றன. ஆய்வின் முடிவுகள் பிரிட்டிஷ் அறுவை சிகிச்சை இதழில் வெளியிடப்பட்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனைகள் வழங்கி வந்த மற்ற சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால், உலகம் முழுவதும் 2020-ஆம் ஆண்டில் 2.84 கோடி அறுவை சிகிச்சைகள் தாமதமடைந்தன அல்லது ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக, மற்ற நோய்களால் பாதிக்கப்பட்டவா்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது தாமதமடைந்து வருகிறது.

கரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து 12 வார காலங்களில் இந்தியாவில் 5.84 லட்சம் நோயாளிகளுக்கான அறுவை சிகிச்சைகள் தாமதமடைந்தன அல்லது ரத்து செய்யப்பட்டன. உலகம் முழுவதும் மருத்துவமனைகளின் சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகும் ஒவ்வொரு வாரமும் கூடுதலாக 24 லட்சம் அறுவை சிகிச்சைகள் ரத்தாகும்.

ஆய்வு நடத்தப்பட்ட 12 வார காலத்தில் எலும்பியல் சாா்ந்த அறுவை சிகிச்சைகள் அதிக அளவில் ரத்து செய்யப்பட்டன. உலகம் முழுவதும் 23 லட்சம் புற்றுநோய் அறுவை சிகிச்சைகள் தாமதமடையவோ அல்லது ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com