ஆயுத தொழிற்சாலைகள் தனியார்மயமல்ல, பெருநிறுவன மயமாக்கப்படும்: நிர்மலா சீதாராமன் விளக்கம்

நாட்டின் ராணுவ ஆயுத தொழிற்சாலைகள் வாரியம், பெருநிறுவன மயமாக்கப்படும்; தனியார்மயமல்ல என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
ஆயுத தொழிற்சாலைகள் தனியார்மயமல்ல, பெருநிறுவன மயமாக்கப்படும்: நிர்மலா சீதாராமன் விளக்கம்


புது தில்லி: நாட்டின் ராணுவ ஆயுத தொழிற்சாலைகள் வாரியம், பெருநிறுவன மயமாக்கப்படும்; தனியார்மயமல்ல என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்களில் இன்று நான்காவது நாளாக முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிர்மலா சீதாராமன்.

புது தில்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ப்படும் பாதுகாப்பு தளவாடங்களுக்கான உதிரி பாகங்கள் இனி இந்தியாவில் தயாரிக்கப்படும்.

சில ராணுவத் தளவாடங்களை  உள்நாட்டில் மட்டுமே தயாரிக்கும் வகையில், அதன் இறக்குமதி தடை செய்யப்படும்.

ராணுவத் தளவாட உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் வகையில் மேக் இன் இந்தியா திட்டம் செயல்படுத்தப்படும்.

ராணுவத் தளவாட உற்பத்தி தொழிற்சாலைகள் பெருநிறுவனங்களாக மாற்றப்படும். தனியார்மயமல்ல, பெருநிறுவனங்களாக மாற்றப்படும்.

ராணுவத் தளவாடத் துறையில் அந்நிய முதலீட்டை ஈர்க்கும் வகையில் அன்னிய முதலீட்டு வரம்பு 49 சதவீதத்தில்  இருந்து 74% ஆக உயர்த்தப்படும்.

குறிப்பிட்ட சில தளவாடங்களை பட்டியலிட்டு, அவை இறக்கமதிக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com