கோவாவில் மேலும் மூவருக்கு கரோனா: பாதிப்பு 11 ஆனது

கொல்கத்தாவிலிருந்து திரும்பிய வாஸ்கோ நகரைச் சேர்ந்த 7 பேரில் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், கோவாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக
கோவாவில் மேலும் மூவருக்கு கரோனா: பாதிப்பு 11 ஆனது

பனாஜி: கொல்கத்தாவிலிருந்து திரும்பிய வாஸ்கோ நகரைச் சேர்ந்த 7 பேரில் மூன்று பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், கோவாவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சனிக்கிழமை தெரிவித்தார். 

தென் கோவாவின் வாஸ்கோ நகரத்தைச் சேர்ந்த ஏழு பேர் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி கொல்கத்தாவுக்குச் சென்று சரக்குகளை வழங்குவதற்காகச் சென்றுள்ளனர். இந்த ஏழு பேர் கொண்ட குழு வெள்ளிக்கிழமை காலை மொலெம் சோதனைச் சாவடி (தெற்கு கோவா) வழியாக கோவாவுக்கு வந்தனர்.

இவர்களை உடனடியாக சோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்களில் மூன்று பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது என்று மாநில சுகாதார அமைச்சர் விஸ்வாஜித் ரானே தெரிவித்தார்.

பாதித்த மூன்று பேரின் உமிழ்நீர் மாதிரிகள் கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள நான்கு பேர் தனிமைப்படுத்தலின் கீழ் உள்ளனர் என்று அவர் கூறினார்.

இதுவரை மொத்த பாதிப்பு 11 ஆக அதிகரித்துள்ளது என்றார். முன்னதாக பசுமை மண்டலமாக அறிவிக்கப்பட்ட கோவா, மே 13 முதல் 11 சாதகமான வழக்குகள் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com