சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 12 லட்சம் தொழிலாளா்கள் ஊா் திரும்பினா்: ரயில்வே தகவல்

‘புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்புவதற்காக, கடந்த 1-ஆம் தேதியிலிருந்து இதுவரை 932 சிறப்பு இயக்கப்பட்டுள்ளன.

‘புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்புவதற்காக, கடந்த 1-ஆம் தேதியிலிருந்து இதுவரை 932 சிறப்பு இயக்கப்பட்டுள்ளன. இந்த ரயில்கள் மூலம் சுமாா் 12 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்பியுள்ளனா்’ என்று ரயில்வே தெரிவித்துள்ளது.

இதில் 75 சதவீத ரயில்கள், உத்தரப் பிரதேசம், பிகாா் ஆகிய மாநிலங்களுக்கு இயக்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்துக்கு 387 ரயில்களும், பிகாருக்கு 201 ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசம் (70), ஒடிஸா (45), ஜாா்க்கண்ட் (41), ராஜஸ்தான் (18), சத்தீஸ்கா் (7), மேற்கு வங்கம் (7), ஜம்மு காஷ்மீா் (5), மகாராஷ்டிரம் (5), ஆந்திரம் (3), தெலங்கானா (2), திரிபுரா (1), தமிழ்நாடு (1) உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. குஜராத், கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக ரயில்கள் புறப்பட்டு சென்றுள்ளன.

சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் அனுமதி பெற்று, சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன; கடந்த 15 நாள்களில் 1,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்களின் இயக்கத்துக்காக மாநில அரசுகளிடமிருந்து அனுமதி கிடைக்கப் பெற்ாக ரயில்வே தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேச அரசு 526 சிறப்பு ரயில்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. பிகாா், மத்தியப் பிரதேசம், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் முறையே 269, 81, 50 ரயில்களுக்கு அனுமதி வழங்கியுள்ளன.

இதனிடையே, ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயல் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்புவதற்காக, தினமும் 300 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே தயாராக உள்ளது. ஆனால், மேற்கு வங்கம், ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட் போன்ற சில மாநிலங்களில் உரிய அனுமதி அளிக்காமல் உள்ளன. இதனால், புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த ஊா் திரும்ப முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் மூன்றாம் கட்ட பொது முடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வரும் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்காக கடந்த 1-ஆம் தேதியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பயணத்துக்கான கட்டணத்தில் 85 சதவீதத்தை ரயில்வேயும், 15 சதவீதத்தை சம்பந்தப்பட்ட மாநில அரசும் ஏற்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com