விண்வெளித் துறையிலும் தனியார் பங்களிப்பு ஊக்குவிப்பு; அணுசக்தித் துறையில் புதிய சீர்திருத்தம்

விண்வெளித் துறையிலும் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும், அணுசக்தி துறையில் புதிய சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
விண்வெளித் துறையிலும் தனியார் பங்களிப்பு ஊக்குவிப்பு; அணுசக்தித் துறையில் புதிய சீர்திருத்தம்

புது தில்லி: விண்வெளித் துறையிலும் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படும், அணுசக்தி துறையில் புதிய சீர்திருத்தம் கொண்டு வரப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புது திர்லலியில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது, தனியார் நிறுவனங்கள் இஸ்ரோ அமைப்பின் உள்கட்டமைப்புகளை, இஸ்ரோவின் வசதிகளை பயன்படுத்தி தங்களின் திறனை உயர்த்திக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.

செயற்கைக்கோள் தயாரிப்பு மற்றும் ஏவுதலில் தனியார் துறைக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படும்.  முதலீட்டுக்கு ஊக்குவிக்கப்படும்.

எதிர்கால விண்வெளித் திட்டங்களில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கவும் வகை செய்யப்படும்.

அணுசக்தித் துறையில் புதிய சீத்திருத்தம்

மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்கத் தயாரிப்பில்  தனியார் துறைக்கும் அனுமதி வழங்கப்படும்.

புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் கதிரியக்கம் முக்கியப் பங்காற்றுகின்றன. எனவே, கதிரியக்கத் தயாரிப்பில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில் புதிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்.

இதன் மூலம் புற்று நோய் உள்ளிட்ட சில நோய்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சைப் பெறும் வசதி ஏற்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com