இந்திய வான்பரப்பை பயன்படுத்துவதில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு: மத்திய அரசு

இந்திய வான்பரப்பை விமானங்கள் பயன்படுத்துவதில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்திய வான்பரப்பை பயன்படுத்துவதில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு: மத்திய அரசு


புது தில்லி: இந்திய வான்பரப்பை விமானங்கள் பயன்படுத்துவதில் இருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் அறிவித்திருப்பதாவது, இந்திய வான்பரப்பை விமானங்கள் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

வான் எல்லையை தாராளமாகப் பயன்படுத்த  அனுமதிப்பதன் மூலம் விமான சேவை நிறுவனங்களுக்கு எரிபொருளும், பயண நேரமும் குறையும்.

இந்தியாவில் கூடுதலக 12 விமான நிலையங்களின் பராமரிப்பு ஒப்பந்தத்துக்கு தனியார் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

விரைவில் விமான பழுது நீக்கம் மற்றும் பராமரிப்பு மையமாக இந்தியா உருவாகும்.

இந்தியாவில் விமான பழுது மற்றும் பராமரிப்புத் துறையில் ரூ.2000 கோடி பணம் புழங்கும்.

மேலும் 6 விமான நிலையங்களில் தனியார் முதலீடுகள் அனுமதிக்கப்படும்.

விமான நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான பணிகள் அரசு, தனியார் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com