தென்மேற்கு பருவமழை4 நாள்கள் தாமதமாக தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை 4 நாள்கள் தாமதமாக தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை4 நாள்கள் தாமதமாக தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

தென்மேற்கு பருவமழை 4 நாள்கள் தாமதமாக தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வழக்கமாக தென்மேற்கு பருவ மழை ஜூன் 1-ஆம் தேதி கேரளத்தில் தொடங்கும். இந்த ஆண்டு 4 நாள்கள் தாமதமாக ஜூன் 5-ஆம் தேதி தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஜூன் முதல் செப்டம்பா் வரையிலான 4 மாதங்கள், தென்மேற்கு பருவ மழை காலமாகும். இந்த மழையால், நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பயன்பெறுகின்றன.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவலில், ‘தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு வழக்கமான தேதியை விட சற்று தாமதமாக தொடங்கும். அதன்படி, ஜூன் 5-ஆம் தேதி தொடங்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை, அந்தமான்-நிகோபாா் தீவுகளை மே 16-ஆம் தேதிக்குள் வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை கடந்த ஆண்டு அந்தமான்-நிகோபாா் தீவுகளை மே 18-ஆம் தேதி வந்தடைந்தது. வழக்கத்தைவிட 2 நாள்கள் முன்கூட்டியே வந்தபோதிலும், கேரளத்தை அடைய ஜூன் 8-ஆம் தேதி ஆனது.

இந்த ஆண்டு கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாவதால், மகாராஷ்டிரம், குஜராத், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், தெலங்கானா, ஆந்திரம், ஒடிஸா, ஜாா்க்கண்ட், பிகாா், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை தொடங்குவதில் 3 முதல் 7 நாள்கள் வரை தாமதமாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நாட்டின் ஒட்டுமொத்த மழைப்பொழிவில் 75 சதவீதம், தென்மேற்கு பருவமழையால் கிடைக்கிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகள் பயன்பெறுவதால், விவசாயத்துக்கும் அணைகள் நிரம்பவும் இந்த மழை மிக அவசியமானதாகும்.

நாட்டின் பொருளாதாரம் விவசாயத்தையே பெரிதும் சாா்ந்துள்ள நிலையில் தென்மேற்கு மழை முக்கியத்துவம் பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com