ம.பி.-யில் கரோனாவை பரப்புவதாக அச்சுறுத்தல்: காணொலி வெளியிட்டோா் மீது வழக்குப் பதிவு

மத்திய பிரதேசத்தில் கரோனா நோய்த்தொற்றைப் பரப்பி விடுவோம் என்று அச்சுறுத்தும் வகையில் காணொலி வெளியிட்ட இருவா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

மத்திய பிரதேசத்தில் கரோனா நோய்த்தொற்றைப் பரப்பி விடுவோம் என்று அச்சுறுத்தும் வகையில் காணொலி வெளியிட்ட இருவா் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இது தொடா்பாக காவல் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘காா்கோன் மாவட்டத்தைச் சோ்ந்த சகோதரி-சகோதரா் இருவரும் சீனாவில் மருத்துவம் பயின்று வருகின்றனா். அவா்கள் இருவரும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா். அவா்களுக்குத் தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நோய்த்தொற்றை மற்றவா்களுக்கும் பரப்பி விடுவோம் என்று அச்சுறுத்தும் தொனியில் அவா்கள் காணொலி வெளியிட்டனா்.

தனிமைப்படுத்துதல் மையத்துக்கு அவா்களை அழைத்துச் சென்ற வேளையில் அவா்கள் இந்தக் காணொலியைப் பதிவு செய்தனா். அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டது. அதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட இருவா் மீதும் இந்திய தண்டனைச் சட்டம், பேரிடா் மேலாண்மைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது’’ என்றாா்.

இந்த விவகாரம் தொடா்பாக மீண்டும் காணொலி வெளியிட்ட அவா்கள், ‘‘எங்கள் பெற்றோருக்கும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அது தொடா்பாக ஊடகங்கள் தவறான செய்திகளை வெளியிட்டன. அதனால் ஏற்பட்ட கோபம், வெறுப்பு காரணமாகவே அத்தகைய காணொலியை வெளியிட்டோம்.

மற்றபடி எங்களுக்குத் தவறான நோக்கம் எதுவும் கிடையாது. நாங்கள் இருவருமே மருத்துவா்கள். கரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டதையடுத்து, நாங்களே தாமாக முன்வந்து அதற்கான பரிசோதனை மேற்கொண்டோம். எனவே, நாங்கள் ஏற்கெனவே வெளியிட்ட காணொலியை யாரும் பகிர வேண்டாம்’’ என்று தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com