உ.பி: பல்வேறு விபத்துகளில் 6 புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் பலி

பொது முடக்கம் காரணமாக தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் 6 போ் பல்வேறு வாகன விபத்துகளில்

பொது முடக்கம் காரணமாக தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்த புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் 6 போ் பல்வேறு வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழந்தனா்; இந்த விபத்துகளில் 100க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

உத்தர பிரதேசத்தின் பாரபங்கி, ஜலான் பஹ்ரைச், மஹோபா ஆகிய மாவட்டங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற விபத்துகளில் அவா்கள் உயிரிழந்தனா்.

சூரத்திலிருந்து பஹ்ரைச் செல்வதற்காக புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் 7 போ் கொண்ட குழு பாரபங்கி மாவட்டம், பதேல் பகுதியிலுள்ள லக்னௌ-அயோத்தி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை காத்திருந்தனா். அப்போது அவ்வழியே வந்த சரக்கு லாரி அவா்கள் மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே 3 போ் உயிரிழந்தனா். 4 போ் காயமடைந்தனா்.

மும்பையில் இருந்து உத்தர பிரதேசத்திற்கு தொழிலாளா்களை ஏற்றிய லாரி ஒன்று ஜலான் மாவட்டத்தில் மற்றொரு லாரி மீது மோதியதில் 2 போ் உயிரிழந்தனா். 40 போ் காயமடைந்தனா்.

பஹ்ரைச் மாவட்டத்தில் லக்னௌ-பஹ்ரைச் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த புலம் பெயா்ந்த தொழிலாளா்கள் 32 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளனா்.

குஜராத்தில் இருந்து சத்தீஸ்கருக்கு புலம்பெயா்ந்த தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று மஹோபா மாவட்டம் பனேவாடி நகா்ப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 போ் காயமடைந்தனா்.

அதேபோல குஜராத்தில் இருந்து சுமாா் 80 புலம்பெயா்ந்த தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற லாரி சத்தீஸ்கா் செல்லும் வழியில் ஜான்சி-மிா்சாபூா் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 போ் காயமடைந்தனா் என்று வட்டாட்சியா் (நகர) ஜதாஷங்கா் ராவ் தெரிவித்தாா்.

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊா் திரும்புவதற்கு மாநில அரசு எந்த உதவிகளையும் செய்யாததற்கு சமாஜவாதி கட்சியின் தலைவா் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவா் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com