திவால் சட்டம் தொடர்பான விதிமுறைகளில் மாற்றம்: நிர்மலா சீதாராமன்

நிறுவனங்கள் திவாலாவது தொடர்பான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 
திவால் சட்டம் தொடர்பான விதிமுறைகளில் மாற்றம்: நிர்மலா சீதாராமன்

நிறுவனங்கள் திவாலாவது தொடர்பான விதிமுறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 5 ஆம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டு பேசியதாவது:

ஊரடங்கு காலத்தில் கடன்களை கட்ட முடியாத சூழல் இருந்தாலும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது. ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரிசெய்யும் வகையில் நிறுவனங்கள் திவாலாவது தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

அதன்படி, ரூ. 1 கோடி வரை வசூல் செய்யப்பட வேண்டிய நிறுவனங்கள் மட்டுமே திவாலானதாக அறிவிக்கப்படும். முன்னதாக இது ரூ. 1 லட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ. 1 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கும் காலம் 6 மாதத்தில் இருந்து ஓராண்டாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக நிறுவன விதிமுறை மீறல்கள் தொடர்பான நடவடிக்கைகள் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளன.

மேலும், அனைத்து தொழில்துறைக்கான விதிமுறைகள் எளிமையாக்கப்படுகிறது. சிறு, குறு தொழில்துறைக்கான சிறப்பு திவால் சட்டம் உருவாக்கப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com