ஆந்திரத்தில் மேலும் 52 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு 2,282-ஐ எட்டியது

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 52 கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. அந்த மாநிலத்தில் மொத்த கரோனா பாதிப்பு 2,282 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

சித்தூர் மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களிலிருந்து தலா 15 வழக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில கட்டுப்பாட்டு அறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை கிழக்கு கோதாவரி, கர்னூல், நெல்லூர், விசாகப்பட்டினம், விஜயநகரம் மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களிலிருந்து பதிவாகியுள்ளன.

தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 705ஐ ஆக உள்ளது. அதேசமயம் 1,527 பேர் நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். கரோனா நோய்த் தொற்றுக்கு இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ சுகாதாரத்துறை தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com