காஷ்மீர்: கரோனா பாதித்த பெண்ணுக்கு சிகிச்சையளித்த 4 மருத்துவர்கள் உள்பட ஐவருக்கு தொற்று

ஜம்மு-காஷ்மீரில் கரோனாவுக்கு உயிரிழந்த பெண்ணுக்கு சிகிச்சையளித்த நான்கு உள்பட ஐந்து மருத்துவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று சாதகமாக இருப்பது அந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
காஷ்மீர்: கரோனா பாதித்த பெண்ணுக்கு சிகிச்சையளித்த 4 மருத்துவர்கள் உள்பட ஐவருக்கு தொற்று

ஜம்மு-காஷ்மீரில் கரோனாவுக்கு உயிரிழந்த பெண்ணுக்கு சிகிச்சையளித்த நான்கு உள்பட ஐந்து மருத்துவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று சாதகமாக இருப்பது அந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். 

ஐந்து மருத்துவர்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ஞாயிற்றுக்கிழமை இரவு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. காஷ்மீரில் கொடிய கரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. 

இதுகுறித்து, உயர் மருத்துவ அதிகாரி ஒருவர் கூறுகையில், 

கரோனா பாதித்து பெண்ணுக்கு சிகிச்சையளித்த நான்கு மருத்துவர்களுக்கு கரோனா நோய்த் தொற்று பாதித்துள்ளது. 

ஹபகாதலைச் சேர்ந்த 29 வயது பெண் கடுமையான தோல் நோயால் பாதிக்கப்பட்டு எஸ்.எம்.எச்.எஸ் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட இவருக்கு, கரோனா பரிசோதனை செய்ததில் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. 

இதையடுத்து, எஸ்.எம்.எச்.எஸ். மருத்துவமனையைச் சேர்ந்த மூன்று மருத்துவர்கள், ஸ்கிம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த ஒருவர் மற்றும் பல் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஒருவர் ஆகிய ஐந்து பேருக்கு கரோனா நோய் சாதகமாக இருப்பது தெரியவந்தது. 

சுகாதாரத்துறையில் உள்ள அனைத்து மருத்துவர்களும் தயவுசெய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு நுரையீரல் நிபுணர் நவீத் ஷா வலியுறுத்தியுள்ளார். 

ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் 13 இறப்புகள் உள்பட 1,188 பேர் கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com