கரோனா எதிரொலி: ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு, பயிற்சி அளிப்பதில் கடும் சிக்கல்

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு மற்றும் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கரோனா எதிரொலி: ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு, பயிற்சி அளிப்பதில் கடும் சிக்கல்


புது தில்லி: கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு மற்றும் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் இது பற்றிக் கூறுகையில், ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு மற்றும் வீரர்களை தேர்வு செய்யும் பணிகள் ஒட்டுமொத்தமாக முடங்கியுள்ளன. ஒரு வேளை இதே நிலை இந்த ஆண்டு இறுதி வரை நீடித்தால் சில மாற்றங்களை செய்ய வேண்டியது வரும் என்று தெரிவித்துள்ளார்.

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு மற்றும் பயிற்சிகள் பாதிக்கப்பட்டால் ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களின் எண்ணிக்கையில் பெரும் பாதிப்பு ஏற்படும். அதே சமயம், ராணுவ வீரர்களை கரோனா பாதிப்பில் இருந்து பாதுகாப்பதும் மிகப் பெரிய சவாலாக உள்ளது. ராணுவ வீரர்களை வேறு வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வது உள்ளிட்டப் பணிகளை எந்த சமரசமும் இல்லாமல் மேற்கொண்டு வருகிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com