பிரதமர் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ.1.86 லட்சம் கோடி மட்டுமே: ப. சிதம்பரம் தகவல்

பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடி அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடி அல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

கரோனா பாதித்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தற்சார்பு இந்தியா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதற்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார ஊக்கத் திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

இதையடுத்து, 20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார ஊக்கத் திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஐந்து நாட்களாக நாள்தோறும் செய்தியாளர்களை சந்தித்து அது தொடர்பான திட்டங்களையும் அறிவித்தார்.

இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் இன்று தனது சுட்டுரையில் தெரிவித்திருப்பதாவது, "பிரதமரும் நிதி அமைச்சரும் அறிவித்த பொருளாதார ஊக்கத் திட்டத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் கோடி அல்ல, வெறும் ரூ.1,86,650 கோடி தான் 

ரூ 1,86,650 கோடி மட்டுமே! இந்த எண்ணை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள். இன்னும் சில மாதங்களில் உண்மை தெரிந்துவிடும்" என்று பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com