புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பேருந்து: உ.பி. அரசு - காங்கிரஸ் இடையே நீடிக்கும் போர்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள 1,000 பேருந்துகள் தொடர்பான விவகாரத்தில், பேருந்துகள் மாநிலங்களுக்குள் நுழைய அனுமதியளிக்காதது பற்றி காங்கிரஸ் மீண்டும் விமரிசித்துள்ளது.
திங்களன்று ஆக்ராவில் திரண்ட புலம்பெயர் தொழிலாளர்கள்
திங்களன்று ஆக்ராவில் திரண்ட புலம்பெயர் தொழிலாளர்கள்


புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள 1,000 பேருந்துகள் தொடர்பான விவகாரத்தில், பேருந்துகள் மாநிலங்களுக்குள் நுழைய அனுமதியளிக்காதது பற்றி காங்கிரஸ் மீண்டும் விமரிசித்துள்ளது.

உத்தரப் பிரதேச அரசு கூடுதல் தலைமைச் செயலர் அவனீஷ் குமார் அவாஸ்திக்கு, பிரியங்கா காந்தியின் தனிச் செயலர் சந்தீப் சிங் அனுப்பியுள்ள கடிதத்தில், "நொய்டா மற்றும் காசியாபாத்துக்கு பேருந்துகளை அனுப்பி வருமாறு இன்று (செவ்வாய்கிழமை) காலை 11.05 மணிக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்திருந்தீர்கள். கடந்த 3 மணி நேரமாக ஆக்ரா அருகே ராஜஸ்தான் பரத்பூரில் பேருந்துகள் உள்ளன. ஆனால், பேருந்துகள் மாநிலத்துக்குள் நுழைய நிர்வாகம் அனுமதி மறுக்கிறது. இது பொறுப்புடன் செயல்படுவதற்கான நேரம் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம். பேருந்துகள் நொய்டா மற்றும் காசியாபாத் வந்தடைய அனுமதி வழங்குங்கள்." என்றார்.

முன்னதாக, புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்குத் திரும்ப காங்கிரஸ் கட்சி 1,000 பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்தது. இதற்கு அனுமதியளிப்பது தொடர்பாக உ.பி. அரசு மற்றும் காங்கிரஸ் இடையே பிரச்னை நிலவி வந்தது. இதன்பிறகு, திங்கள்கிழமை இதற்கான ஒப்புதலை உத்தரப் பிரதேச அரசு வழங்கியது. இதைத் தொடர்ந்து, பேருந்துகளை ஒப்படைக்கும் நேரம், இடம், பேருந்துகளின் தரச் சான்றிதழ் உள்ளிட்டவை தொடர்பாக பரிமாறப்பட்ட கடிதங்களில் பிரியங்கா காந்தியின் தனிச் செயலர் மற்றும் உத்தரப் பிரதேச அரசின் கூடுதல் தலைமைச் செயலருக்கிடையே பிரச்னை நிலவி வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com