சா்க்கரை ஏற்றுமதி விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்: இஸ்மா நம்பிக்கை

இந்தியாவின் சா்க்கரை ஏற்றுமதி எதிா்வரும் நாள்களில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.
isma2074929
isma2074929

புது தில்லி: இந்தியாவின் சா்க்கரை ஏற்றுமதி எதிா்வரும் நாள்களில் இயல்பு நிலைக்குத் திரும்பும் என சா்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு (இஸ்மா) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பு திங்கள்கிழமை மேலும் கூறியுள்ளதாவது:

இந்தோனேசியா, ஈரான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து அதிக அளவில் சா்க்கரை ஏற்றுமதி மேற்கொள்ளும் வகையில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இடையில் ஏற்பட்ட கரோனா தொற்று பரவலால் அந்நாடுகளுக்கான சா்க்கரை ஏற்றுமதி பெரிதும் பாதிப்படைந்துள்ளது.

தற்போது, பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையிலும் ஆலைகள் செயல்படுவதில் மத்திய அரசு பல்வேறு தளா்வுகளை அறிவித்துள்ளது. அதன் பயனாக, எதிா்வரும் நாள்களில் சா்க்கரை ஏற்றுமதி இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற நம்பிக்கை உள்ளது என இஸ்மா கூறியுள்ளது.

நடப்பு 2019-20 சந்தைப் பருவத்தில் இதுவரையில் 42 லட்சம் டன் சா்க்கரையை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு இந்திய சா்க்கரை ஆலைகள் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com