இந்தியாவி்ல் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்ட 64 நாள்கள்: மற்ற நாடுகளில்?

உலக நாடுகள் பலவற்றையும் பெரிய அளவில் பாதித்திருக்கும் கரோனா தீநுண்மி இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவே கூறலாம்.
இந்தியாவி்ல் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்ட 64 நாள்கள்: மற்ற நாடுகளில்?


புது தில்லி: உலக நாடுகள் பலவற்றையும் பெரிய அளவில் பாதித்திருக்கும் கரோனா தீநுண்மி இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையால் மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவே கூறலாம்.

இந்தியாவில் இன்று கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. பலியானோரின் எண்ணிக்கை மூன்று ஆயிரத்தில் உள்ளது.

ஆனால், மற்ற நாடுகளை விட, இந்தியாவில் கரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

அதாவது இந்தியாவில் கரோனா தொற்று ஏற்பட்ட பிறகு, 100 நோயாளிகளில் இருந்து இன்று ஒரு லட்சம் நோயாளிகளை எட்ட சரியாக 64 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் இதுவே அமெரிக்காவில் 100இல் இருந்து  வெறும் 25 நாள்களில் ஒரு லட்சம் நோயாளிகளை எட்டியுள்ளது.


இத்தாலியில் கரோனா தொற்று ஏற்பட்டு 36 நாள்களில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தொட்டுள்ளது. ஸ்பெயினில் 30 நாள்களிலேயே கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டியுள்ளது. 

இவ்வாறு வளர்ந்த நாடுகளில் கூட கரோனா தொற்று அதன் கோர முகத்தைக் காட்டியிருக்கும் நிலையில், மக்கள் தொகை அதிகம் இருக்கும் இந்தியாவில் ஊரடங்கு நடவடிக்கையால் கரோனா பரவல் மிகச் சிறப்பாகக் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், ஒரு லட்சத்தைத் தொட்ட கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையைக் கொண்டிருக்கும் நாடுகளோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் கரோனா பாதித்து பலியானவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. மே 12ம் தேதி கணக்கீட்டின்படி, இந்தியாவில் கரோனா பாதித்தவர்களில் மரண விகிதம் 3.2% ஆக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com