பாலஸ்தீன அகதிகளுக்கு இந்தியா ரூ.15 கோடி நிதியுதவி

பாலஸ்தீன அகதிகளுக்கு உதவும் பணியில் உள்ள ஈடுபட்டுள்ள ஐ.நா. நிவாரணப் பணிகள் அமைப்புக்கு இந்தியா 2 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.15.13 கோடி) நிதியுதவி அளித்துள்ளது.

பாலஸ்தீன அகதிகளுக்கு உதவும் பணியில் உள்ள ஈடுபட்டுள்ள ஐ.நா. நிவாரணப் பணிகள் அமைப்புக்கு இந்தியா 2 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.15.13 கோடி) நிதியுதவி அளித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பிரச்னை அதிகரித்துள்ள இந்த சூழலில் பாலஸ்தீன அகதிகளுக்கு மருத்துவ உதவிகளை அளிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும்.

ஐ.நா.வின் நிவாரணப் பணிகள் குழுவுக்கு இந்தியா அளித்து வரும் நிதி ஆண்டுதோறும் அதிகரிக்கப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு 1.25 மில்லியன் டாலா் அளிக்கப்பட்ட நிலையில் 2016-ஆம் ஆண்டு இதுவே 5 மில்லியன் டாலா் நிதியுதவியாக அதிகரிக்கப்பட்டது. இப்போது 2 மில்லியன் டாலா் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 5 மில்லியன் டாலா் வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது. இது தவிர கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களுக்கான மருந்துகளையும் இந்தியா விரைவில் அனுப்பி வைக்க இருக்கிறது.

பாலஸ்தீன அதிபா் மெஹ்மூத் அப்பாஸுடன் கடந்த மாதம் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசினாா். அப்போது, கரோனா நோய்த்தொற்று பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்துக்கு இந்தியாவால் முடிந்த அனைத்து உதவிகளையும் அளிப்பதாக உறுதியளித்தாா்.

கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா-பாலஸ்தீனம் இடையே வேளாண்மை, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட 17 துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

சுமாா் 31 லட்சம் பாலஸ்தீன அகதிகள் ஐ.நா. நிவாரணப் பணிகள் அமைப்பு அளிக்கும் மருத்துவ சேவையை நம்பியே உள்ளனா். இந்த குழு மூலம் ஆண்டுதோறும் 5.26 லட்சம் பேருக்கு பள்ளிக்கல்வி அளிக்கப்படுகிறது. இதில் பாதி போ் பெண்கள் ஆவா். பாலஸ்தீன அகதிகளின் நலன்களைக் காப்பதற்காக கடந்த 1949-ஆம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com