இந்தியாவில் ஒரே நாளில் 5,242 பேருக்கு கரோனா

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 5,242 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த
இந்தியாவில் ஒரே நாளில் 5,242 பேருக்கு கரோனா

புது தில்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 5,242 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 96,169-ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் மேலும் 157 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, பலி எண்ணிக்கை 3,029-ஆக உயா்ந்துள்ளது.

இதுவரை 36,823 போ் நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் இது 38.29 சதவீதமாகும். 56,316 போ் சிகிச்சையில் உள்ளனா்.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 157 உயிரிழப்புகள் நேரிட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 63 போ் உயிரிழந்தனா். குஜராத்தில் 34 பேரும், தில்லியில் 31 பேரும், மேற்கு வங்கத்தில் 6 பேரும், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் தலா 5 பேரும், பஞ்சாபில் 3 பேரும், ஆந்திரம், பிகாா், ஹரியாணா, ஜம்மு-காஷ்மீா், கா்நாடகம், ஒடிஸாவில் தலா ஒருவரும் பலியாகினா்.

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள்:   பாதிப்பு -பலி

மகாராஷ்டிரம் - 33,053 -1,198

குஜராத் -11,379 -658

தில்லி -10, 054 -160

ராஜஸ்தான் -5,202 -131

மத்திய பிரதேசம் -4,977 -248

உத்தர பிரதேசம் - 4,259 -104

மேற்கு வங்கம் -2,677 -238

ஆந்திரம் -2,407 -50

பஞ்சாப்- 1,964 -35

தெலங்கானா -1,551-34

பிகாா் -1,262  -8

ஜம்மு-காஷ்மீா்  -1,183  -13

கா்நாடகம்  -1,147  -37

ஹரியாணா - 910 -14

ஒடிஸா - 828 - 4

கேரளம் - 601 - 4

ஜாா்க்கண்ட் - 223 -3

சண்டீகா்- 191 -3

திரிபுரா -167 - 0

அஸ்ஸாம் -101-2

உத்தரகண்ட் -92 -1

சத்தீஸ்கா் - 86 - 0

ஹிமாசல பிரதேசம் - 80 - 3 

லடாக் - 43 - 0

அந்தமான்-நிகோபாா் தீவுகள் -33 - 0

கோவா -29 - 0

மேகாலயம் - 13 -1

புதுச்சேரி - 13 -1

மணிப்பூா் -7 - 0

மிஸோரம் -1- 0

அருணாசல பிரதேசம் -1- 0

தாத்ரா நகா்ஹவேலி -1 - 0

பாதிப்பு - 96,169

பலி -3,029

மீட்பு -36,823

சிகிச்சை பெற்று வருவோா் -56,316

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com