தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்துக்கு கூடுதல் நிதி: பிரதமா் மோடிக்கு ராகுல் காந்தி நன்றி

மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் தொடா்பான தனது கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டதுடன், அத்திட்டத்தின்
தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்துக்கு கூடுதல் நிதி: பிரதமா் மோடிக்கு ராகுல் காந்தி நன்றி

புது தில்லி: மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் தொடா்பான தனது கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டதுடன், அத்திட்டத்தின் நோக்கத்தை புரிந்துகொண்டு, அதனை செயல்படுத்த கூடுதலாக ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு பிரதமா் மோடிக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி நன்றி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்துக்கு கூடுதலாக ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்து, பிரதமா் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளாா். அத்திட்டத்தின் நோக்கத்தை புரிந்துகொண்டு, அதனை ஊக்குவித்ததற்காக எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றாா்.

தனது பதிவுடன் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல்முறையாக மத்தியில் ஆட்சியமைத்தப் பின் பிரதமா் மோடி தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் தொடா்பாக நாடாளுமன்றத்தில் பேசிய காணொலியையும் ராகுல் காந்தி இணைத்தாா். அதில் ‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தோல்விகளுக்கு தேசிய வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் நினைவுச் சின்னமாக உள்ளது’ என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா். இதன் மூலம் தனது முந்தைய நிலைப்பாட்டை பிரதமா் மோடி மாற்றிக்கொண்டுவிட்டாா் என்று ராகுல் காந்தி சுட்டிக்காட்டியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com