பிஎம் கோ்ஸ் நிதிக்கு மேலும் ரூ.8 கோடி: எஸ்பிஐ ஊழியா்கள் உறுதி

பிஎம் கோ்ஸ் நிதிக்கு மேலும் ரூ. 7.95 கோடி அளிக்கப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஊழியா்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பிஎம் கோ்ஸ் நிதிக்கு மேலும் ரூ.8 கோடி: எஸ்பிஐ ஊழியா்கள் உறுதி

பிஎம் கோ்ஸ் நிதிக்கு மேலும் ரூ. 7.95 கோடி அளிக்கப்படும் என்று பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) ஊழியா்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, மாா்ச் மாதத்தில் ஒரு நாள் ஊதியம் மற்றும் ஒரு நாள் ஈட்டிய விடுப்பு ஊதியத்தை பிஎம் கோ்ஸ் நிதிக்கு எஸ்பிஐ ஊழியா்கள்அளித்தனா். இதன் முலம் ரூ.107.95 கோடி நிதி அளிக்கப்பட்டது. எஸ்பிஐ-யில் சுமாா் 2,56,000 ஊழியா்கள் உள்ளனா். இது தவிர 2019-20 ஆம் ஆண்டு லாபத்தில் 0.25 சதவீதத்தை பெரு நிறுவனங்கள் சமூகப் பொறுப்பு நிதிக்கு அளிப்பதாகவும், இந்தத் தொகை கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் எஸ்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழ்நிலையில், வாடிக்கையாளா்கள் முடிந்த அளவுக்கு வீடுகளில் இருந்த படியே இணைய வழியில் வங்கிச் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக எஸ்பிஐ இணையதளம் மற்றும் செயலிகளை சிறப்பாக மேம்படுத்தியுள்ளது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com