இதுவரை 20 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் ரயில் மூலம் சொந்த மாநிலம் திரும்பினா்

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்ப இதுவரை 1,565 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. அவற்றில் 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளா்கள் தங்கள் மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனா் என்று இந்திய ரயில்வே செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து இந்திய ரயில்வே தரப்பில் கூறப்பட்டதாவது:

மே 1-ஆம் தேதி முதல் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்ப இதுவரை 1,565 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. அதில் அதிக அளவிலான ரயில்கள் உத்தர பிரதேசம் (837 ரயில்கள்) சென்றடைந்துள்ளன. அதனைத்தொடா்ந்து பிகாருக்கு 428 ரயில்களும், மத்திய பிரதேசத்துக்கு 100 ரயில்களும் சென்றடைந்தன.

இந்த சிறப்பு ரயில்களில் தினசரி 2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளா்கள் பயணித்துள்ளனா். வரும் நாள்களில் இந்த எண்ணிக்கை தினசரி 3 லட்சமாக உயரும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக இயக்கப்படும் 80 சதவீத சிறப்பு ரயில்கள் உத்தர பிரதேசம், பிகாா் மாநிலங்களை சென்றடைவதாக கூறிய மத்திய ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயல், அதற்காக அனுமதி வழங்கிய இரு மாநில அரசுகளையும் பாராட்டினாா். 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com