மே 22-இல் எதிர்க்கட்சிகள் கூட்டம்: சோனியா அழைப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மே-22 ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மே-22 ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

இதுபற்றி தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மே 22-ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டத்துக்கு சோனியா காந்தி தலைமை வகிக்கிறார். பிற்பகல் 3 மணிக்கு காணொலிக் காட்சி வாயிலாக இந்தக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து சீதாராம் யெச்சூரி, ராஷ்ட்ரிய ஜனதா தளத்திலிருந்து தேஜஸ்வி யாதவ் உள்பட 20 கட்சிகளிலிருந்து தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதை மம்தா பானர்ஜி திங்கள்கிழமை உறுதி செய்தார்.

இந்தக் கூட்டத்தில் கரோனா நெருக்கடிக்கு மத்தியில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்குத் திரும்புவதில் சந்திக்கும் இன்னல்கள் பற்றி விவாதிக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com