கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட தெலங்கானா

தெலங்கானாவின் தலைநகர் ஹைதராபாத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து ஒட்டுமொத்த மாநிலமும் பச்சை மண்டலமக அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்ட தெலங்கானா


ஹைதராபாத்: தெலங்கானாவின் தலைநகர் ஹைதராபாத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து ஒட்டுமொத்த மாநிலமும் பச்சை மண்டலமக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த மாநிலமும் பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து தெலங்கானாவில் இன்று முதல் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனுமதி கிடைத்துள்ளது.

அதே சமயம், மாநிலத்தில் ஊரடங்கு மற்றும் இரவு நேர கட்டுப்பாடு மே 31 வரை அமலில் இருக்கும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவைகளும் இரவு 7 மணி வரை இயக்கப்படும், ஹைதராபாத் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படாது. அனைத்து கடைகளும் திறந்திருக்கும், தனியார் நிறுவனங்கள் முழு பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும் தெலங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் 1452 குடும்பங்கள் இருக்கின்றன. இப்பகுதிக்குள் பொதுமக்கள் நடமாட தடை விதிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com