தீவிர புயலாக மேற்கு வங்கத்தில் நாளை கரையை கடக்கிறது உம்பன் பயுல்

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள உம்பன் புயலாது தீவிர புயலாக மேற்கு வங்கக் கடற்கரையை நாளை மாலையோ அல்லது இரவிலோ தீவிர புயலாக கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிர புயலாக மேற்கு வங்கத்தில் நாளை கரையை கடக்கிறது உம்பன் பயுல்

சென்னை:  வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள உம்பன் புயலாது தீவிர புயலாக மேற்கு வங்கக் கடற்கரையை நாளை மாலையோ அல்லது இரவிலோ தீவிர புயலாக கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, 

ஞாயிற்றுக்கிழமை அதிதீவிர புயலாக இருந்த உம்பன், திங்கள்கிழமை காலை கடும் புயலாகவும், பின்னர் மிகக் கடும் புயலாகவும் (சூப்பர் புயல்) வலுப்பெற்றது. 

இந்தப் புயலானது, மிக கடும் புயலான உம்பன் இன்று காலை 11 மணி நிலவரப்படி சற்று வலுவிழந்து கடும் புயலாக மத்திய மேற்கு மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதியில் கொல்கத்தாவில் இருந்து தெற்கு - தென்கிழக்கே சுமார் 690 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது கடந்த 6 மணி நேரத்தில் வடக்கு மற்றும் வட மேற்கு திசையில், மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்துள்ளது.

மேலும் உம்பன் புயலானது வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து மேற்கு வங்கக் கடற்கரையை நாளை மாலையோ அல்லது இரவிலோ தீவிர புயலாக கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மீனவர்கள், செவ்வாய்க்கிழமை (மே 19), மத்திய வங்கக் கடல் பகுதிக்கும், செவ்வாய் (மே 19) மற்றும் புதன்கிழமைகளில் (மே 20) வடக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

மேலும் குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்றானது, மணிக்கு 60 கி.மீ. வரை வீசக்கூடும். எனவே செவ்வாய்க்கிழமை, இந்தப் பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். 

13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: உம்பன் புயல் காரணமாக, தமிழகத்தின் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி வட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. 

சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com