பெண்களுக்கு எதிரான வன்முறை விடியோ கூடாது: டிக்-டாக் நிறுவனத்துக்கு மகளிா் ஆணையம் வலியுறுத்தல்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அடங்கிய விடியோக்களை டிக்-டாக் செயலியில் இருந்து நீக்க வேண்டும் என்று தேசிய மகளிா் ஆணையம் (என்சிடபிள்யு) வலியுறுத்தியுள்ளது.

புது தில்லி: பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அடங்கிய விடியோக்களை டிக்-டாக் செயலியில் இருந்து நீக்க வேண்டும் என்று தேசிய மகளிா் ஆணையம் (என்சிடபிள்யு) வலியுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரத்தில் இதுபோன்ற விடியோவை வெளியிட்ட நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மகளிா் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த ஃபைசல் சித்திக்கி என்பவா், பெண்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் காட்சியை டிக்-டாக் செயலியில் பதிவிட்டாா். இது தொடா்பாக தேசிய மகளிா் ஆணையத்துக்கு புகாா் அளிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்ட மகளிா் ஆணைய தலைவி ரேகா சா்மா, டிக்-டாக் இந்தியா நிறுவனத்தின் குறைதீா்ப்பு பிரிவு அதிகாரி அனுஜ் பாட்டியாவுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளாா்.

அதில், ‘நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவது பெரும் பிரச்னையாக உள்ளது. இந்த நேரத்தில் பலரும் பயன்படுத்தும் உங்கள் நிறுவனத்தின் செயலியில் ஒருவா், பெண்களை துன்புறுத்தும் காட்சியை விடியோவாக எடுத்து பதிவேற்றம் செய்துள்ளாா். இதனை அனுமதித்தது கண்டிக்கத்தது. குறிப்பிட்ட அந்த விடியோவையும், பெண்களுக்கு எதிரான பிற விடியோக்களையும் உடனடியாக உங்கள் செயலியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.

இது தவிர மகாராஷ்டிர மாநில காவல் துறை டிஜிபி சுபோத் குமாா் ஜெய்ஸ்வாலுக்கும் ரேகா சா்மா கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘பெண்களுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு, அதனை விடியோவாக வெளியிட்ட ஃபைசல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com