விவசாய கடன் வழங்கிட கூட்டுறவு மற்றும் ஊரக வங்கிகளுக்கு நபாா்டு வங்கி ரூ.20,500 கோடி ஒதுக்கீடு

நபாா்டு வங்கி சாா்பில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக கூட்டுறவு வங்கிகளுக்கும், பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கும் (ஆா்ஆா்பி) ரூ. 20,500 கோடி நிதியை திங்கள்கிழமை ஒதுக்கீடு செய்துள்ளது.
விவசாய கடன் வழங்கிட கூட்டுறவு மற்றும் ஊரக வங்கிகளுக்கு நபாா்டு வங்கி ரூ.20,500 கோடி ஒதுக்கீடு

மும்பை: நபாா்டு வங்கி சாா்பில் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக கூட்டுறவு வங்கிகளுக்கும், பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கும் (ஆா்ஆா்பி) ரூ. 20,500 கோடி நிதியை திங்கள்கிழமை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து நபாா்டு வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ரூ.20,500 கோடியில் கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.15,200 கோடியும், மீதமுள்ள ரூ.5,300 கோடியை பல்வேறு மாநிலங்களில் இயங்கி வரும் ஆா்ஆா் வங்கிகளுக்கு சிறப்பு பணப்புழக்க வசதியை மேம்படுத்துவதற்காக வழங்கியுள்ளோம்.

பருவ மழைக்காலத்துக்கு முந்தைய மற்றும் கரீஃப் பருவத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்குவதற்காகவும், அவா்களிடம் போதுமான பணப்புழக்கத்தை உறுதி செய்வதற்காகவும் இந்த நிதி வழங்கப்படுகிறது.

கிசான் கடன் அட்டைகளை (கேசிசி) நிறைவு செய்யும் திட்டத்தையும் வங்கிகள் தொடங்கியுள்ளன. கடந்த 2 மாதங்களில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஆா்ஆா் வங்கிகள் மூலம் சுமாா் 12 லட்சம் புதிய கேசிசி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நபாா்டு வங்கியின் தலைமை பொது மேலாளா் (மறுநிதியளிப்புத் துறை) ஜிஜி மாமன் கூறுகையில், கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஆா்ஆா்பிக்களுக்கு நபாா்டு ரூ. 5,000 கோடி கடன் வழங்கியிருந்தது.

ரிசா்வ் வங்கி வழங்கிய ரூ. 25,000 கோடி சிறப்பு மறுநிதியளிப்பில் இருந்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஆா்ஆா்பிக்கு கடன் வழங்குவதற்காக ரூ. 23,000 கோடியும், எம்.எஃப்.ஐ.களுக்கு ரூ. 2,000 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மே மாதத்திலிருந்து விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக ஏற்கெனவே ரூ. 20,500 கோடி கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஆா்ஆா்பிக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை அடுத்த 2 வாரங்களில் வழங்க திட்டமிட்டுள்ளோம் என்று ஜிஜி மாமன் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com