புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பேருந்து: ஆக்ராவைத் தொடர்ந்து நொய்டாவுக்கு இடம் மாறும் அரசியல்

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக உத்தரப் பிரதேச காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள பேருந்துகளை மாநிலங்களுக்குள் அனுமதிப்பதில் நடைபெறும் அரசியல் போர் ஆக்ராவிலிருந்து நொய்டா எல்லைக்கு இடம்பெயர்ந்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பேருந்து: ஆக்ராவைத் தொடர்ந்து நொய்டாவுக்கு இடம் மாறும் அரசியல்


புலம்பெயர் தொழிலாளர்களுக்காக உத்தரப் பிரதேச காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள பேருந்துகளை மாநிலங்களுக்குள் அனுமதிப்பதில் நடைபெறும் அரசியல் போர் ஆக்ராவிலிருந்து நொய்டா எல்லைக்கு இடம்பெயர்ந்துள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊர் சென்றடைவதற்காக உத்தரப் பிரதேச காங்கிரஸ் 1,000 பேருந்துகளை ஏற்பாடு செய்தது. இதற்கான ஒப்புதலை உத்தரப் பிரதேச அரசு திங்கள்கிழமை அளித்தது.

இதைத் தொடர்ந்து மாநிலங்களுக்குள் நுழைவதற்கான அனுமதிக்காக பேருந்துகள் ஆக்ரா எல்லையில் உள்ளன.

இந்த நிலையில், உத்தரப் பிரதேச அரசிடம் ஒப்படைப்பதற்காக தில்லி - நொய்டா எல்லையில் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகளை காங்கிரஸ் கொண்டு வந்துள்ளது. மாநிலங்களுக்குள் நுழைய அரசின் அனுமதிக்காக காங்கிரஸ் காத்துக்கொண்டிருக்கிறது. ராஜீவ் சுக்லா, சுஷ்மிதா தெப், தில்லி காங்கிரஸ் தலைவர் அனில் குமார் சௌதரி மற்றும் ராஜீவ் சதவ் உள்ளிட்டோர் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு வந்தடைந்துள்ளனர்.

இதுபற்றி ராஜீவ் சுக்லா ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "அலுவலர்கள் முதலில் இந்தப் பேருந்துகளுக்கு சரியான ஆவணங்கள் இல்லையென புகார் தெரிவித்தனர். எனினும், 879 பேருந்துகள் முழுமையான ஆவணங்களுடன் உள்ளன. எனவே, புலம்பெயர் தொழிலாளர்களின் போக்குவரத்துக்கு இந்தப் பேருந்துகளை அனுமதிக்க வேண்டும். இந்தப் பேருந்துகளில் மோட்டார் வாகனங்கள் எதுவும் இடம்பெறவில்லை. வேண்டுமென்றால் அவர்களது சொந்தக் கட்சியின் பதாகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் பிரியங்கா காந்தி தெரிவித்துவிட்டார். பிறகு என்ன பிரச்னை?" என்றார்.

இதைத் தொடர்ந்து தில்லி காங்கிரஸ் தலைவர் அனில் குமார் தெரிவிக்கையில், "உத்தரப் பிரதேச அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம். பிரியங்கா காந்தி வாக்குறுதியளித்ததன்படி, உத்தரப் பிரதேச அரசிடம் ஒப்படைப்பதற்காக நாங்கள் பேருந்துகளுடன் வந்துள்ளோம். நிறைய பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. ஓட்டுநர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன.

இதேபோல் நிறைய பேருந்துகள் செவ்வாய்கிழமை காலை முதல் ஆக்ரா எல்லையில் காத்துக்கொண்டிருக்கின்றன. கட்சித் தலைவர்கள் பேருந்துகள் சிலவற்றை நொய்டாவுக்கு அனுப்பினர். காவல் துறையினர் அவர்களை செக்டார் 39-இல் தடுத்து நிறுத்தினர்." என்றார்.

முன்னதாக செவ்வாய்கிழமை மாலை, போராட்டத்தில் ஈடுபட்டதாக உத்தரப் பிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு மற்றும் சிலர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, கிழக்கு உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி தெரிவிக்கையில், "1,049 பேருந்துகளில் 879 பேருந்துகள் தகுதியானவை என மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் 200 பேருந்துகளை காங்கிரஸ் கட்சி புதன்கிழமை ஒப்படைக்கும். புலம்பெயர் தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான பேருந்து சேவையை ஏற்பாடு செய்வதில் தாமதிக்க வேண்டாம்" என்று வலியுறுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com