உ.பி. எல்லையிலிருந்து பேருந்துகளைத் திரும்ப அழைத்துக்கொண்டார் பிரியங்கா

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் ஏற்பாடு செய்த 1,000 பேருந்துகளுக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு அனுமதியளிக்காததைத் தொடர்ந்து, எல்லையிலிருந்த பேருந்துகளை காங்கிரஸ் திரும்ப அழைத்துக்கொண்டது.
உ.பி. எல்லையிலிருந்து பேருந்துகளைத் திரும்ப அழைத்துக்கொண்டார் பிரியங்கா


புலம்பெயர் தொழிலாளர்களுக்காக காங்கிரஸ் ஏற்பாடு செய்த 1,000 பேருந்துகளுக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு அனுமதியளிக்காததைத் தொடர்ந்து, எல்லையிலிருந்த பேருந்துகளை காங்கிரஸ் திரும்ப அழைத்துக்கொண்டது.

புலம்பெயர் தொழிலாளர்களின் போக்குவரத்து வசதிக்காக காங்கிரஸ் கட்சி 1,000 பேருந்துகளை ஏற்பாடு செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் - உத்தரப் பிரதேச அரசுக்கு இடையே அரசியல் ரீதியிலான போர் மூண்டது. இதையடுத்து, இதற்கான ஒப்புதலை உத்தரப் பிரதேச அரசு திங்கள்கிழமை அறிவித்தது. எனினும், மாநிலங்களுக்குள் நுழைவதற்கான அனுமதி கிடைக்காமல் காங்கிரஸ் ஏற்பாடு செய்த பேருந்துகள் ஆக்ரா எல்லையில் காத்திருந்தன.

இதைத் தொடர்ந்து, பிரியங்கா காந்தி இன்று மாலை காணொலிக் காட்சி வாயிலாக பேசுகையில், "அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல. இந்தப் பேருந்துகளில் பாஜகவின் கொடிகளையும், ஸ்டிக்கர்களையும் பயன்படுத்த விரும்பினால் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதை நீங்கள்தான் ஏற்பாடு செய்தீர்கள் என்று சொல்ல விரும்பினாலும் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால், பேருந்துகள் இயங்க அனுமதியுங்கள்.

பேருந்துகள் தயாராகி மாலை 4 மணியுடன் 24 மணி நேரம் ஆகிறது. 4 மணி வரை பேருந்துகள் மாநில எல்லைகளில் இருக்கும். அதைப் பயன்படுத்த வேண்டுமானால் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதற்கு அனுமதி தாருங்கள். இல்லையெனில் அவை திரும்ப அழைத்துக் கொள்ளப்படும்" என்றார்.

இதையடுத்து, பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படாததால் பிரியங்கா காந்தி அவற்றை திரும்ப அழைத்துக்கொண்டார். இதன்பிறகு, மாநில எல்லைகளிலிருந்து பேருந்துகள் புறப்பட்டுச் சென்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com