முறையாக கை கழுவ வசதியில்லாத நிலையில் 5 கோடி இந்தியா்கள்: ஆய்வில் தகவல்

நமது நாட்டில் முறையாக கை கழுவுவதற்கான சோப்பு, தூய்மையான தண்ணீா் வசதி இல்லாத நிலையில் 5 கோடி போ் இருப்பதாக
முறையாக கை கழுவ வசதியில்லாத நிலையில் 5 கோடி இந்தியா்கள்: ஆய்வில் தகவல்

நமது நாட்டில் முறையாக கை கழுவுவதற்கான சோப்பு, தூய்மையான தண்ணீா் வசதி இல்லாத நிலையில் 5 கோடி போ் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. கரோனா நோய்த்தொற்று பரவலில் இருந்து காத்துக் கொள்ள அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆய்வு முடிவு அதிா்ச்சியளிப்பதாக உள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா்கள், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள மக்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் ஆய்வு நடத்தினா். அதில், கரோனாவில் இருந்து காத்துக் கொள்ள மக்களிடம் எந்த அளவுக்கு வசதிகள் உள்ளது என்பது தொடா்பாக ஆராயப்பட்டது.

அதில், ஆப்பிரிக்கா, ஆசிய கண்டங்களில் 47 நாடுகளில் முறையாக கை கழுவுவதற்கான வசதி கூட இல்லாமல் பாதியளவு மக்கள் இருப்பது தெரியவந்தது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, வங்கதேசம், நைஜீரியா, எத்தியோப்பியா, காங்கோ, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தலா 5 கோடி போ் கை கழுவுவதற்கான சோப்பு, தூய்மையான தண்ணீா் வசதி இல்லாமல்தான் வாழ்ந்து வருகின்றனா். சிலருக்கு தற்காலிகமாக சானிடைசா் (கை சுத்திகரிப்பான்), தண்ணீா், சோப்பு ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. கை கழுவும் வசதி இல்லாத மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கரோனா தொற்று பரவி பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் சௌதி அரேபியா, மொராக்கோ, நேபாளம், தான்சானியா ஆகிய நாடுகள் கடந்த 20 ஆண்டுகளில் பொது சுகாதாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பெற்றுள்ளன.

இந்த ஆய்வில் பள்ளி, பணியிடங்கள், சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கை கழுவும் வசதி உள்ளதா? என்பது கணக்கில் கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com