உம்பன் புயலால் மேற்குவங்கத்தில் 72 பேர் பலி: இழப்பீடு அறிவித்தார் மம்தா

உம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் இதுவரை 72 பேர் பலியாகியிருப்பதாகவும், பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2.5 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என்றும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 
உம்பன் புயலால் மேற்குவங்கத்தில் 72 பேர் பலி: இழப்பீடு அறிவித்தார் மம்தா

உம்பன் புயலால் மேற்குவங்கத்தில் 72 பேர் பலி: இழப்பீடு அறிவித்தார் மம்தா
உம்பன் புயலால் மேற்கு வங்கத்தில் இதுவரை 72 பேர் பலியாகியிருப்பதாகவும், பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2.5 லட்சம் இழப்பீடு அளிக்கப்படும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், இதுபோன்றதொரு பேரிடரை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. பிரதமர் நரேந்திர மோடி மேற்கு வங்க மாநிலத்துக்கு வந்து, தற்போதிருக்கும் நிலைமையை, சேதங்களை நேரில் பார்வையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றும் மம்தா கூறியுள்ளார்.

வங்கக் கடலில் உருவான ‘உம்பன் புயல்’ புதன்கிழமை பிற்பகலில் கரையைக் கடந்தது. மணிக்கு 190 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசியதுடன், கன மழை பெய்ததால் மேற்கு வங்கம், ஒடிஸா மாநிலங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com