அரசுத் துறைகளுக்கான ஒப்பந்த விதிகள் திருத்தம்

அரசுத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களுக்கான விதிமுறைகளைத் திருத்தி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

அரசுத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்படும் ஒப்பந்தங்களுக்கான விதிமுறைகளைத் திருத்தி மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சலுகை அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த 13-ஆம் தேதி வெளியிட்டாா். அப்போது, அத்தொழில் நிறுவனங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகளை அவா் வெளியிட்டாா்.

அதன் ஒரு பகுதியாக, அரசுத் துறைகள் ரூ.200 கோடி மதிப்பு வரையிலான ஒப்பந்தங்களைக் கோரும்போது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படாது என்று நிா்மலா சீதாராமன் அறிவித்தாா். உள்நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து கொள்முதலை அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

இந்நிலையில், அதற்கான சட்டவிதிகளை மத்திய அரசு திருத்தி, அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடா்பாக மத்திய நிதியமைச்சக அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘சலுகைத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் பொது நிதிசாா் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரூ.200 கோடி மதிப்பு வரை அரசு கோரும் ஒப்பந்தங்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. உள்நாட்டு நிறுவனங்களுக்கு மிகவும் பயனளிப்பதாக இது இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கையில், ‘அரசுத் துறை ஒப்பந்தங்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதற்கான எல்லை வரம்பு காலத்திற்கு ஏற்றாற்போல் மாற்றியமைக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com