இந்தியாவில் கரோனா: மும்பையில் அதிக பாதிப்பு; சென்னையில் குறைந்த பலி எண்ணிக்கை

இந்தியாவில் கரோனா: மும்பையில் அதிக பாதிப்பு; சென்னையில் குறைந்த பலி எண்ணிக்கை

இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டிவிட்டது. அதிக பாதிப்பு இருக்கும் நகரங்களில் முதல் இடத்தில் மும்பை உள்ளது. சென்னையில் பாதிப்பு அதிகம் இருந்தாலும் பலி எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்டிவிட்டது. அதிக பாதிப்பு இருக்கும் நகரங்களில் முதல் இடத்தில் மும்பை உள்ளது. சென்னையில் பாதிப்பு அதிகம் இருந்தாலும் பலி எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

புது தில்லி: இந்தியாவில் கரோனா தொற்று அதிகம் பாதித்த முதல் 10 நகரங்களில் மட்டுமே 50 சதவீத கரோனா நோயாளிகள் இருக்கிறார்கள். இதில் மூன்று நகரங்கள் மகாராஷ்டிரத்தையும், இரண்டு குஜராத்தையும், ராஜஸ்தான், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, தில்லி என தலா ஒரு நகரங்களும் அடங்கும்.

இந்தியாவிலேயே மும்பை மாநகரம் தான் கரோனா நோயாளிகள் அதிகம் இருக்கும் நகரமாகவும், குணமடைவோர் விகிதம் கவலைதரக் கூடியதாகவும் உள்ளது.

மும்பையில் மட்டும் 22,800பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. இவர்களில் 4352 பேர் குணமடைந்துள்ளனர். 800 பேர் பலியாகினர்.

இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைவோரின் விகிதம் 39 சதவீதமாக இருக்கும் நிலையில் மும்பையில் இது மிகக் குறைவாக 19.1% ஆக உள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு எட்டு ஆயிரத்தை எட்டிவிட்டது. குஜராத்தின் அகமதாபாத் (8000) மற்றும் சூரத் (1150) நகரங்களில் மட்டும் சுமார் 10000 கரோனா தொற்று நோயாளிகள் உள்ளனர்.

இந்தியாவிலேயே அதிகக் கரோனா  நோயாளிகளைக் கொண்ட நகரத்தில் இரண்டாவது இடத்தில் தில்லி இருக்கிறது.  அதே சமயம் இங்கு மீட்பு விகிதமும் 50.4 சதவீதமாக உள்ளது. இந்திய சராசரியை விட மிக அதிகம்.

இதேப்போல கொல்கத்தாவில் சுமார் 1500 பேருக்கும் மத்தியப் பிரதேசத்தில் 2,700 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய புள்ளி விவரத்தின் அடிப்படையில் இந்தியாவில் அதிக கரோனா நோயாளிகளைக் கொண்ட முதல் 10 நகரங்களின் புள்ளிவிவரம்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com