கரோனா பாதிப்பு: பிற மாநிலங்கள் நிலவரம்

பிற மாநிலங்களில் இன்று (வியாழக்கிழமை) கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பிற மாநிலங்களில் இன்று (வியாழக்கிழமை) கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தான்:

ராஜஸ்தானில் புதிதாக 212 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 6,227 ஆக உயர்ந்துள்ளது.

உத்தரகண்ட்:

உத்தரகண்டில் இரவு 8 மணி வரை புதிதாக 24 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்துள்ளது.  

மத்தியப் பிரதேசம்:

மத்தியப் பிரதேசத்தில் இன்று புதிதாக 248 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 5,981 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2,843 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 270 பேர் பலியாகியுள்ளனர். 

தெலங்கானா:

தெலங்கானாவில் இன்று புதிதாக 38 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,699 ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர்:

ஜம்மு காஷ்மீரில் இன்று 59 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஜம்முவிலிருந்து 8 பேர். காஷ்மீரிலிருந்து 51 பேர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,449 ஆக உயர்ந்துள்ளது. இதில் 745 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தம் 20 பேர் பலியாகியுள்ளனர்.

குஜராத்:

குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 371 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 12,910 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,488 பேர் குணமடைந்துள்ளனர். 773 பேர் பலியாகியுள்ளனர்.

ஜார்கண்ட்:

ஜார்கண்டில் இன்று புதிதாக 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com