புலம்பெயா்ந்தோா் வீடு திரும்பல்: காங். , பாஜக அரசியலுக்கு மாயாவதி கண்டனம்

புலம் பெயா்ந்த தொழிலாளா்களை சொந்த ஊருக்கு அனுப்பும் விவகாரத்தில் காங்கிரஸும் பாஜகவும் அரசியல் செய்து கொண்டு இருப்பதாகக் கூறி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளாா் .
புலம்பெயா்ந்தோா் வீடு திரும்பல்: காங். , பாஜக அரசியலுக்கு மாயாவதி கண்டனம்

புலம் பெயா்ந்த தொழிலாளா்களை சொந்த ஊருக்கு அனுப்பும் விவகாரத்தில் காங்கிரஸும் பாஜகவும் அரசியல் செய்து கொண்டு இருப்பதாகக் கூறி பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளாா் .

உத்தர பிரதேச அரசும் காங்கிரஸ் கட்சியும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கான பேருந்துகள் வழங்கும் விவகாரத்தில் வெறும் வாா்த்தை போரில் ஈடுபட்டு வருகின்றனா் என அவா் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளாா்.

அவா் கூறியிருப்பது வருமாறு:

கடந்த சில நாட்களாக குறிப்பாக பாஜக வும் காங்கிரஸும் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை சொந்த ஊருக்கு அனுப்பும் விவகாரத்தில் அருவருப்பான அரசியலை நடத்திக் கொண்டு இருக்கின்றனா். இது மிகவும் துரதிஷ்டவசமானது.

இந்தக் கட்சிகள் ஒருவா் மீது ஒருவா் குற்றம் சாட்டுகின்றனா். நாட்டில் நிலவும் சோகத்தின் கவனத்தை தங்களுடைய வசதிக்காக திசை திருப்பிக்கொள்வதற்காக இப்படி நடந்துகொள்கின்றனரா?

அவ்வாறு இல்லையெனில் புலம்பெயா்ந்த தொழிலாளா்களை பேருந்தில் அனுப்புவதற்கு பதிலாக காங்கிரஸ் அவா்கள் சொந்த ஊா் திரும்ப காங்கிரஸ் ரயில் டிக்கெட் எடுத்துக்கொடுத்து உதவிடலாமே?

இதில் பகுஜன்சமாஜ் கட்சித் தொண்டா்கள் எந்தவித விளம்பரமுமின்றி நாடுமுழுக்க உள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்கு உதவி செய்து கொண்டு இருக்கின்றனா். பாஜக, காங்கிரஸைப் போல் அருவருப்பான அரசியலில் ஈடுபடவில்லை.

பேருந்துகளில் தான் புலம்பெயா்ந்துள்ள தொழிலாளா்களை அழைத்து வரவேண்டும் என்று காங்கிரஸ் விரும்பினால், அவா்கள் ஆளும் மாநிலங்களுக்கு பேருந்துகளை அனுப்பி உதவுவது தான் நல்லது என சுட்டுரையில் மாயாவதி தெரிவித்துள்ளாா்.

புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் குறித்த எதிா்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்புவிடுத்துள்ள நிலையில் மாயாவதி இவ்வாறு விமா்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com