தென்கொரியாவில் மாணவருக்கு கரோனா; திறக்கப்படுவதற்கு முன்பே பள்ளி மூடல்

தென்கொரியாவில் பள்ளி மாணவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து திறக்கப்படுவதற்கு முன்பே பள்ளி மூடப்பட்டது.
தென்கொரியாவில் மாணவருக்கு கரோனா; திறக்கப்படுவதற்கு முன்பே பள்ளி மூடல்

தென்கொரியாவில் பள்ளி மாணவருக்கு தொற்று உறுதியானதை அடுத்து திறக்கப்படுவதற்கு முன்பே பள்ளி மூடப்பட்டது.

தென்கொரியாவில் 5 முறை ஊரடங்கு நீடிப்புக்குப் பிறகு புதன்கிழமை நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டன. முதற்கட்டமாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கின. தொடக்க மற்றும் இடைநிலை மாணவர்களுக்கு ஜூன் 8 ஆம் தேதிக்குள் வகுப்புகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அங்குள்ள ஒரு பள்ளியில் மாணவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி திறக்கப்படுவதற்கு முன்னதாகவே மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 

புதன்கிழமை முதல் வகுப்பு தொடங்குவதற்கு முன்னரே மாணவருக்கு தொற்று உறுதியான செய்தி பள்ளி நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் பள்ளி மூடப்பட்டது. 

மேலும், கரோனா உறுதியான மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், அவருடன் தொடர்பில் இருந்த 17 மாணவர்கள் பள்ளி தங்குமிடத்தில் தனிமை படுத்தப்பட்டுள்ளனர், மேலும் 94 பேரை வீட்டில் தனிமையில் இருக்க பள்ளி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் பள்ளியில் கிருமிநாசினி தெளிப்பது உள்ளிட்ட சுகாதாரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு நாள்களுக்கு பின்னர் ஆன்லைனில் வகுப்பு தொடங்கும் என்று தொடங்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com