ஜார்க்கண்ட்: மதுபானங்களை வீட்டிற்கே சென்று டெலிவரி செய்த ஸ்விக்கி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதுபானங்களை வீட்டிற்கே சென்று வழங்கும் வேலையை ஸ்விக்கி நிறுவனம் தொடங்கியுள்ளது. 
ஜார்க்கண்ட்: மதுபானங்களை வீட்டிற்கே சென்று டெலிவரி செய்த ஸ்விக்கி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதுபானங்களை வீட்டிற்கே சென்று வழங்கும் வேலையை ஸ்விக்கி நிறுவனம் தொடங்கியுள்ளது. 

பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மதுபானங்களை ஹோம் டெலிவரி செய்ய, அம்மாநில அரசுடன் கைகோர்த்துள்ளது. 

அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஒப்புதலுடன் இன்று தலைநகர் ராஞ்சியில் மதுபானங்களை டெலிவரி செய்யும் வேலையைத் தொடங்கியுள்ளது ஸ்விக்கி நிறுவனம். தொடர்ந்து, மாநிலத்தின் பிற முக்கிய நகரங்களுக்கும் அடுத்த ஒரு வாரத்திற்குள் தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

முன்னதாக, மதுக்கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் பொருட்டு ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்கள் மதுபானங்களை வீட்டிற்கே சென்று வழங்கும் முடிவை எடுத்துள்ளன. 

அதன்படி, ஜார்க்கண்டில் ராஞ்சி நகரில் இது முதல்கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், தங்களது  ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் கொண்டு ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம். ஏனென்றால் வயது சரிபார்ப்புக்காக அடையாள அட்டை பயன்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டர் செய்த பின்னர் வரும் ஒடிபி எண்ணை பயன்படுத்தி டெலிவரி செய்யும் நபரிடம் இருந்து மதுபானங்களை பெற்றுக்கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com