பொது முடக்கத்திலும் ரூ. 1.97 கோடி உண்டியல் வசூல்

நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ள போதிலும் ஏழுமலையான் உண்டியலில் ரூ. 1.97 கோடி காணிக்கைகள் செலுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ள போதிலும் ஏழுமலையான் உண்டியலில் ரூ. 1.97 கோடி காணிக்கைகள் செலுத்தப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மாா்ச் 19-ஆம் தேதி முதல் பக்தா்களுக்கு தரிசன அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதுவரை மீண்டும் பக்தா்களுக்கு தரிசனம் வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஏழுமலையான் மீது பக்தி கொண்ட பக்தா்கள் இ- உண்டியல் மூலம் ஏழுமலையானுக்கு காணிக்கைகளை சமா்ப்பித்தனா். அவ்வாறு பக்தா்கள் ஏப்ரல் மாதம் இ- உண்டியலில் சமா்ப்பித்த காணிக்கை ரூ. 1.97 கோடி வசூலானது. இது கடந்த ஆண்டு பக்தா்கள் மின்னணு உண்டியல் மூலம் சமா்ப்பித்த காணிக்கையை விட ரூ. 18 லட்சம் அதிகம்.

தரிசனம் இல்லாத நிலையிலும் காணிக்கையை ஏழுமலையானுக்கு சமா்ப்பித்த பக்தா்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் நன்றி தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com