சிறப்பு ரயில்களில் பயணிக்க இதுவரை 13 லட்சம் பேர் முன்பதிவு: ரயில்வே தகவல்

ஜூன் 1 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ள 230 சிறப்பு ரயில்களில் இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

பொது முடக்கம் காரணமாக நாடு முழுவதும் ரயில் சேவை கடந்த இரு மாதங்களாக  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், வருகிற ஜூன் 1 ஆம் தேதி முதல் மீண்டும் பயணிகள் ரயில் இயக்கப்பட உள்ளன. முதற்கட்டமாக நாட்டின் முக்கிய நகரங்களுக்கு 230 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 

அதற்கான ரயில்கள் குறித்த அட்டவணையும் வெளியிடப்பட்டு வியாழக்கிழமை முதல் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. முதலில் இணையதளம் மற்றும் செல்லிடப்பேசி செயலி மூலம் மட்டுமே முன்பதிவு செய்யமுடியும் என கூறப்பட்ட நிலையில் டிக்கெட் முன்பதிவு மையங்கள், பொது சேவை மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. 

இந்நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள 230 ரயில்களில் இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

இந்த 230 ரயில்களில் தமிழகத்துக்கு எந்த ரயில்களும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com