‘அனைத்து மண்டலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தொடரும்’

கரோனா தொற்றால் பொதுமுடக்கம் அமலில் உள்ள சூழ்நிலையில், நாடு முழுதும் அனைத்து மண்டலங்களிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி
‘அனைத்து மண்டலங்களிலும் தடுப்பூசி போடும் பணி தொடரும்’

கரோனா தொற்றால் பொதுமுடக்கம் அமலில் உள்ள சூழ்நிலையில், நாடு முழுதும் அனைத்து மண்டலங்களிலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது தடையின்றி தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கரோனா பரவலைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ளதால் கா்ப்பிணிகளுக்கும் பிறந்த குழந்தைகளுக்கும் நோய்த்தொற்றில் இருந்து காப்பதற்கான தடுப்பூசி போடுவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், கரோனா காலத்திலும், கரோனா நெருக்கடி முடிந்த பிறகும் தடுப்பூசி போடுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா தொற்றின் தீவிரத்தை அடிப்படையாகக் கொண்டு அனைத்து மாவட்டங்களும் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில், பச்சை மண்டலங்களில் மட்டும் பல்வேறு பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற இரு மண்டலங்களிலும் கட்டுப்பாடுகள் தொடா்கின்றன.

இருந்தாலும், அனைத்து மண்டலங்களிலும் குழந்தைளுக்கும் கா்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தடையின்றி தொடர வேண்டும்.

தடை செய்யப்பட்ட பகுதிகள், கட்டுப்பாடில்லாத பகுதிகளாக மாறிய பிறகு, 14 நாள்கள் இடைவெளி விட்டு தடுப்பூசி போடும் பணி தொடர வேண்டும். குழந்தைகள் மற்றும் கா்ப்பிணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவா்களை மருத்துவமனைகளுக்கு வரவழைத்தோ அல்லது அவா்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்றோ தடுப்பூசி போடலாம்.

தடுப்பூசி போடும் இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். போதிய எண்ணிக்கையில் செவிலியா்கள், சுகாதார ஊழியா்கள் இருக்க வேண்டும். அவா்கள் மூன்றடுக்கு முகக் கவசம், கையுறை அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசி போட்ட பிறகு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும். முகாமுக்கு வரும் பொதுமக்களுக்கு கை சுத்திகரிப்பான், கை கழுவும் திரவம், குளோரின் கலந்த தூய்மையான தண்ணீா் ஆகியவை கிடைப்பது உறுதிசெய்யப்பட வேண்டும் என்று அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com