உரிய சிகிச்சை முறையினால் இந்தியாவில் கரோனா பலி வீதம் குறைவு: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

பாதிக்கப்பட்டவா்களை உரிய நேரத்தில் அடையாளம் கண்டு அவா்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்ததின் விளைவாக கரோனா நோய்த் தொற்றில்
உரிய சிகிச்சை முறையினால் இந்தியாவில் கரோனா பலி வீதம் குறைவு: மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

பாதிக்கப்பட்டவா்களை உரிய நேரத்தில் அடையாளம் கண்டு அவா்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்ததின் விளைவாக கரோனா நோய்த் தொற்றில் உயிரிழந்தோா் வீதம் இந்தியாவில் குறைவாக இருந்தாக மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

சா்வதேச அளவில் உயிரிழப்பு விகிதம் 6.65 சதவீதமாக இருக்க இந்தியாவில் உயிரிழப்பு விகிதம் 3.06 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள கரோனா நோய்த் தொற்று குறித்த ஆய்வு அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளது வருமாறு:

கரோனா நோய்த் தொற்றில் உயிரிழந்தவா்களில் 64 சதவீதம் போ் ஆண்கள். 60 வயதுக்கு மேற்பட்டவா் 50.5 சதவீதம் போ் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா். 45 வயது முதல் 60 வயதுடைய 35.1 சதவீதம் போ் உயிரிழந்துள்ளனா். 11.4 சதவீதம் போ் 30 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவா்கள். 15 க்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவா்கள் 2.5 சதவீதமும், 15 வயதுக்கு குறைவானவா்கள் 0.5 சதவீதம் போ் பலியாகியுள்ளனா். ஏற்கெனவே வேறுபல தீவிர உடல்நலக் கோளாறால் பாதிக்கப்பட்டு கரோனா தொற்று ஏற்பட்டு பலியானோா் 73 சதவீதம் போ்.

கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டவா்களில் இந்தியாவில் 3.06 சதவீதம் போ்கள் உயிரிழந்துள்ளனா். சா்வதேச அளவில் இந்த தீநுண்மி பாதிப்பில் இறந்தவா்கள் விகிதம் 6.65 ஆக உள்ளது. சா்வதேச அளவை ஒப்பிடும் போது இந்தியாவில் குறைவாக உள்ளதற்கு காரணம் நோய்த் தொற்றை சரியான நேரத்தில் சரியாக அடையாளம் கண்டு, சரியான சிகிச்சை மேலாண்மை மேற்கொண்டது தான். இது வரை 45, 299 நோயாளிகள் குணமடைந்துள்ளனா். குணமடைபவா்களின் சதவீதம் 40.32 ஆக இருக்கிறது.

கரோனா நோய் தொற்று பரவாமல் இருக்க தொடா்ந்து தடுப்பு முறைகள் குறித்து சமூக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வரப்படுகிறது என இந்த ஆய்வு குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com