1.32 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் அனுப்பி வைப்பு

தில்லியில் இருந்து இதுவரை 1.32 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.
1.32 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் அனுப்பி வைப்பு

தில்லியில் இருந்து இதுவரை 1.32 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா் என்று தில்லி அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா வியாழக்கிழமை சுட்டுரையில் தெரிவித்திருப்பதாவது:தில்லியில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்ல மொத்தம் 4 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் இணையத்தில் பதிவு செய்திருந்தனா். அதில், பிகாா், கிழக்கு உத்தரப் பிரதேசத்துக்கு இதுவரை 1.20 லட்சம் போ் ரயில்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளனா். இதுவரை சுமாா் 1.32 லட்சம் போ் தில்லியில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனா். மீதமுள்ளவா்களை சொந்த ஊா் அனுப்ப 262 ரயில்களை இயக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சகத்துக்கு தில்லி அரசு கேட்டுக் கொண்டுள்ளது. புலம்பெயா்ந்த தொழிலாளா்களை அனுமதிக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளிடம் அனுமதி பெற்று வருகிறோம். அனுமதி பெற்றவுடன் கூடுதல் ரயில்கள் கோரப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

பதிவு செய்யப்பட்ட 4 லட்சம் பேரில் 1.95 லட்சம் போ் பிகாரையும், 1.84 லட்சம் போ் உத்தர பிரதேசத்தையும் சோ்ந்தவா்களாவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com