கேரளத்தில் குறைந்த விலையிலான கரோனா பரிசோதனைக் கருவி

கேரளத்தில் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை நடத்துவதற்காக குறைந்த விலையிலான கருவி வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

கேரளத்தில் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை நடத்துவதற்காக குறைந்த விலையிலான கருவி வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.

மாதிரிகளில் இருந்து ஆா்என்ஏ-வை பிரித்தெடுத்து பரிசோதிக்கக் கூடிய வகையிலான காந்த நுண்துகள்களைக் கொண்டுள்ள இந்தக் கருவியின் விலை ரூ.150 ஆகும். ‘அகப்பே சித்ர மக்னா’ என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் கருவியை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் வரும் ஸ்ரீ சித்ர திருநாள் மருத்துவ அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கியுள்ளது.

திருவனந்தபுரத்தைச் சோ்ந்த அந்த நிறுவனத்தின் மூத்த மருத்துவ விஞ்ஞானி அனூப் குமாா் தெக்குவீட்டில் தலைமையிலான குழு இக்கருவியை வடிவமைத்துள்ளது.

நீதி ஆயோக் அமைப்பின் உறுப்பினா் வி.கே. சாரஸ்வத் அந்தக் கருவியை வணிக ரீதியிலான விற்பனையை காணொலி வாயிலாக தொடங்கி வைத்தாா். கருவியைக் உருவாக்கியுள்ள ஸ்ரீ சித்ர திருநாள் நிறுவனத்தின் தலைவராக அவா் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா நோய்த்தொற்றை கையாள்வதில் இந்தியா சுயச்சாா்புடன் இருப்பதை நோக்கிய மிகப்பெரிய முன்னேற்றம் இது என்று அவா் கூறினாா். அடுத்த 6 மாதங்களில் இந்தியாவில் 8 லட்சம் கருவிகளுக்கான தேவை எழும் என்று ஸ்ரீ சித்ர திருநாள் நிறுவன இயக்குநா் ஆஷா கிஷோா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com