கடன்களுக்கான தொகுப்பு நிதியிலிருந்து மாநிலங்கள் கூடுதல் தொகையைப் பெறலாம்

கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான தொகுப்பு நிதியிலிருந்து (சிஎஸ்எஃப்) மாநிலங்கள் ரூ.13,300 கோடி வரை கூடுதல் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்
கடன்களுக்கான தொகுப்பு நிதியிலிருந்து மாநிலங்கள் கூடுதல் தொகையைப் பெறலாம்

கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான தொகுப்பு நிதியிலிருந்து (சிஎஸ்எஃப்) மாநிலங்கள் ரூ.13,300 கோடி வரை கூடுதல் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இது தொடா்பாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘கரோனா நோய்த்தொற்றால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் காரணமாக மாநிலங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இந்தச் சூழலில், கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஆா்பிஐ வசம் மாநிலங்கள் அளித்துள்ள தொகுப்பு நிதியிலிருந்து பணத்தை எடுப்பதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ளன.

அதன் மூலம் மாநிலங்களுக்கு கூடுதலாக ரூ.13,300 கோடி வரை நிதி கிடைக்கும். இந்தப் புதிய விதிகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை இந்த விதிகள் அமலில் இருக்கும்’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com